அறிவித்தல்
12 வது இருவழி உதவி முறைமையில் இணைந்து கொண்ட அங்கத்தவர்களிற்கு!
தங்களால் தெரிவு செய்யப்பட்ட தொகையினை எதிர்வரும் 15-8-2024 ம் திகதிகளுக்கு முன்னர் செலுத்தி தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்


விசேட நன்மை 1 இன் ஊடான உதவியினைப் பெற்றுக்கொள்வதற்கான
விண்ணப்பப் படிவம்
நிதி உதவியினை பெற்றுக்கொள்ளும் அங்கத்தவர்களினால் பூர்த்திசெய்யப்படவேண்டிய
விண்ணப்பப் படிவம்
விண்ணப்ப படிவம்
இரு வழி உதவி முறைமை செயற்றிட்டம் 12
இச்செயற்திட்டமானது 20 மாதங்களை உள்ளடக்கியது
ஒரு அங்கத்தவர் CAD $ 500, 250 CAD $ 250) , 125 CAD $ 125 என்ற அடிப்படையில் விரும்பிய ஒரு தொகையை மாதாந்தம் எமது அமைப்பின் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு சேமிப்பாக வழங்குதல்.
தெரிவு செய்யும் தொகையினை மாதாந்த நிரந்தர தொகையாகவோ அல்லது மாதாந்த கேள்வி முறையில் தீர்மானிக்கப்படும் தொகையாகவோ செலுத்த முடியும்
அங்கத்தவர்களால் வழங்கப்படும் சேமிப்பின் 20 மாத சேமிப்பு பணமானது ஒரு மாதம் ஒரு அங்கத்தவருக்கு என்ற அடிப்படையில் வழங்கப்படும் அதே வேளை நிதி உதவியை பெற்றுக் கொள்ள விரும்பும் அங்கத்தவர் விதிமுறைகளுக்கு உட்பட்ட கேள்வி முறையின் நிதி உதவியைப் பெற்று கொள்ள முடியும்
மாதாந்தம் ஒரு அங்கத்தவர் என்ற அடிப்படையில் வழங்கப்படும் உதவி தொகையினை பெற விரும்பும் அங்கத்தவர்கள் ஒவ்வொருமாதமும் 02 ம் திகதி 5.00 மணிக்கு கேள்வி முறையில் நேரடியாகவோ தொலைபேசி ஊடாகவோ இணைந்து கொள்ள முடியும் அதே வேளை குறித்த உதவியை பெறும் அங்கத்தவருக்கான உதவித் தொகை அந்த மாதம் 15 ம் திகதி வழங்கும் வகையில் குறித்த சேமிப்பு தொகையினை ஒவ்வொரு அங்கத்தவரும் வழங்குதல் வேண்டும
அனைத்து அங்கத்தவர்களும் பணம் செலுத்தும் செயற்பாடுகளுக்குமான பற்றுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தங்களுக்கான பதிவு படிவங்களில் பதியப்பட்டிருத்தலை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.
அங்கத்தவர்களால் வழங்கப்படும் சேமிப்பின் 20 மாத சேமிப்பு பணமானது ஒரு மாதம் ஒரு அங்கத்தவருக்கு என்ற அடிப்படையில் வழங்கப்படும் அதே வேளை நிதி உதவியை பெற்றுக் கொள்ள விரும்பும் அங்கத்தவர் விதிமுறைகளுக்கு உட்பட்ட கேள்வி முறையின் நிதி உதவியைப் பெற்று கொள்ள முடியும்
அனைத்துச் செயற்பாடுகள் பற்றிய மேலதிக அறிவிப்புக்களும் எமது அமைப்பின் இணையத்தளம் or முகப்புத்தகம் மற்றும் Viber Group இன் ஊடாக அறிவிக்கப்படும
இம் முறைமையில் இணைந்து குறித்த திகதிகளில் பணம் செலுத்த தவறும் அங்கத்தவர்கள் தாமதக்கட்டணம் செலுத்துதல் வேண்டும்.
குறைந்தது இரண்டு மாதங்கள் தொடர்சியாக பணம் செலுத்தாத அங்கத்தவர் இம் முறைமையில் இருந்து தாமாகவே விலகியவராக கருதப்படுவார்
இம் முறைமையில் இருந்த இடையில் விலகும் அல்லது இடை விலக்கப்படும் அங்கத்தவ செலுத்திய உதவி தொகையை 20 மாதங்களின் பின்னரே பெற்றுக்கொள்ள முடியும்.
ஒவ்வொரு அங்கத்தவர்களும் மாதாந்த சேவைக்கட்டணமாக 10 டொலர்கள் செலுத்துதல் வேண்டும்.(குறித்த சேவைக்கட்டணமானது எம்மால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின் ஊடாக மாணவர்களிற்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்விற்கு பயன்படுத்தப்படும்)
இச் செயற்றிட்டத்தின் இணையும் ஒவ்வொரு அங்கத்தவர்களும் எமது அமைப்பின் நோக்கம் கருதி செயற்படுவதுடன் நிபந்தனைகளிற்கு உட்பட்டு பெற்றுக்கொள்ளும் நிதிகளை குறித்த காலத்தில் ஒழுங்கான முறையில் மீள செலுத்துதல் வேண்டும். அவ்வாறு மீள செலுத்த தவறும் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் எமது அமைப்பின் கறுப்பு பட்டியலில் இணைத்து கொள்ளப்படும்.
புதிய அங்கத்தவர்கள் எமது அங்கத்தவர்களின் அறிமுகப்படுத்தல் ஊடாகவே இச் செயற்றிட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்.
மாதாந்தம் நிதி உதவியினை பெற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு அங்கத்தவரும் அதற்கான விசேட படிவத்தினை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
ஐந்து மாதங்களுக்கு மேல் இத் திட்டத்தில் இணைந்து உதவியை வழங்கி வரும் அங்கத்தவர்கள் தங்களால் வழங்கப்பட்ட தொகையின் 50 வீதத்தினை எமது அமைப்பின் ‘அவசர மற்றும் சிக்கன கடனுதவி சேவை’ செயற்றிட்டத்தின் ஊடாக வட்டி இன்றிய கடனுதவியாக பெற்றுக் கொள்ளமுடியும். (நிபந்தனைகளுக்கு உட்பட்டது )
விசேட நன்மையான இச் சேவையை பெறுபவர்கள் எமது அமைப்பின் அங்கத்தவராக இருந்து குறைந்தது இரண்டு வருடங்கள் அங்கத்துவ பணம் செலுத்தியவராக இருத்தல் வேண்டும். (‘அவசர மற்றும் சிக்கன கடனுதவி சேவை’ செயற்றிட்டத்தின் விதிகளுக்கு அமைவாக விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து இவ் விசேட உதவியை பெற்றுக் கொள்ள முடியும்)
இச் செயற்றிட்டத்தின் ஊடாக நன்மைகளை பெற்ற பின்னர் தவிர்க்க முடியாத சூழ்நிலையின் போது பணம் செலுத்த முடியாத நிலைக்கு ஆழாகும் சந்தர்ப்பத்தில் எமது அமைப்பின் விசேட உதவித்திட்டத்தின் ஊடாக குறித்த தொகையினை மீள செலுத்துவதற்கு நீண்ட கால அவகாசம்வழங்கப்படும் அல்லது குறித்த கடன் தொகையானது எமது அமைப்பின் ஊடாக மீள செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.